மராட்டியத்தில் பாஜக கூட்டணி வெற்றி: ஜார்கண்ட்டில் இந்தியா கூட்டணி வெற்றி

மராட்டியத்தில் பாஜக கூட்டணியும், ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணியும் வெற்றி பெற்றுள்ளது.

Update: 2024-11-23 00:25 GMT

மும்பை,

மராட்டியம், ஜார்கண்ட் சட்டசபை தேர்தலுடன் கேரளாவின் வயநாடு, மராட்டியத்தின் நாண்டட் ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன.

Live Updates
2024-11-23 17:05 GMT

மராட்டியத்தில் பாஜக கூட்டணி வெற்றி

மராட்டியத்தில் பாஜக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றிபெற்றுள்ளது. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக கூட்டணி 233 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது. இதன் மூலம் மராட்டியத்தில் பாஜக கூட்டணி ஆட்சியமைக்கிறது.

காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 49 தொகுதிகளிலும், பிற கட்சிகள் 6 தொகுதிகளிலும் வெற்றிபெற்றுள்ளது.

ஜார்கண்ட்டில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி

ஜார்கண்ட்டில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி அமோக வெற்றிபெற்றுள்ளது. மொத்தமுள்ள 81 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி 56 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது. இதன் மூலம் ஜார்கண்ட்டில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியமைக்கிறது.

அதேவேளை, பாஜக தலைமையிலான கூட்டணி 24 தொகுதிகளிலும், பிற கட்சி 1 தொகுதியிலும் வெற்றிபெற்றுள்ளன. 

2024-11-23 15:13 GMT

மராட்டியத்தில் சட்ட சபை தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

தற்போதைய வெற்றி நிலவரம்

தேசிய ஜனநாயக கூட்டணி: 228 இடங்களில் வெற்றி- 6 இடங்களில் முன்னிலை,

இந்தியா கூட்டணி: 46 இடங்களில் வெற்றி; 2 இடங்களில் முன்னிலை

பிற கட்சிகள்; 5 இடங்களில் வெற்றி, 1 இடத்தில் முன்னிலை

2024-11-23 15:11 GMT

இந்தியா கூட்டணி; 56 இடங்களில் வெற்றி

தேசிய ஜனநாயக கூட்டணி: 23 இடங்களில் வெற்றி; 1 இடத்தில் முன்னிலை

2024-11-23 14:31 GMT

ஜார்கண்ட்டில் இந்தியா கூட்டணி வெற்றி - மு.க.ஸ்டாலின் வாழ்த்து

ஜார்கண்ட்டில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில், ஹேமந்த் சோரனுக்கு முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜார்கண்ட் தேர்தல் வெற்றி மக்களாட்சிக்கும், மதசார்பின்மைக்கும் கிடைத்த வெற்றி என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

2024-11-23 13:04 GMT

மராட்டிய தேர்தல் முடிவுகள் எதிர்பாராதவை: அவற்றை விரிவாக ஆராய்வோம் என்று காங்கிரஸ் எம்.பி   ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய தீர்ப்பை வழங்கிய ஜார்கண்ட் மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். 

2024-11-23 12:59 GMT

மராட்டியத்தில் தற்போது முதல் மந்திரியாக உள்ள ஏக்நாத் ஷிண்டே 1.2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். கோப்ரி -பச்பகடி தொகுதியில் போட்டியிட்ட ஏக்நாத் ஷிண்டே, ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 060 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட உத்தவ் சிவசேனா கட்சி வேட்பாளர் கேதார் திகே 38,343 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வியை சந்தித்தார்.

2024-11-23 11:21 GMT

மராட்டியத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை தக்கவைப்பது உறுதியாகியுள்ளது. அதேபோல, ஜார்க்கண்டில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி ஆட்சியை தக்க வைத்துள்ளது.

தற்போதைய நிலவரம்

மராட்டியம்

தேசிய ஜனநாயக கூட்டணி; 118 முன்னிலை; 112 இடங்களில் வெற்றி- மொத்தம் 230 இடங்களில் வெற்றி முகம்

இந்தியா: 33 இடங்களில் முன்னிலை: 20 இடங்களில் வெற்றி, மொத்தம் 51 இடங்களில் வெற்றி முகம்

ஜார்க்கண்ட்:

இந்தியா கூட்டணி: 37 இடங்களில் முன்னிலை; 21 இடங்களில் வெற்றி: மொத்தம் 51 இடங்களில் வெற்றி முகம்

தேசிய ஜனநாயக கூட்டணி: 17 இடங்களில் முன்னிலை; 6 இடங்களில் வெற்றி; மொத்தம் 23 இடங்களில் வெற்றிமுகம்

2024-11-23 10:19 GMT

மராட்டிய மாநிலத்தில் நடைபெற்ற சட்ட சபை தேர்தலில் பாஜக கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது. இதேபோல உத்தர பிரதேச சட்ட சபை இடைத்தேர்தலிலும் அக்கட்சி அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது. இதையடுத்து, டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு பிரதமர் மோடி இன்று மாலை 6 மணிக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாஜக அலுவலகத்தில் மோடி, தொண்டர்களை சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்க பாஜகவினர் முடிவு செய்துள்ளனர்.

2024-11-23 10:06 GMT

வயநாடு மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். வயநாடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட பிரியங்கா காந்தி 6 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அவரது வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பிரியங்கா காந்தி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். 

2024-11-23 09:22 GMT

மராட்டியத்தில் ராஜ்தாக்கரேவின் நவநிர்மான் சேனா மற்றும் பிரகாஷ் அம்பேத்கரின் வஞ்சித் பகுஜன் அகாடி உள்ளிட்ட கட்சிகள் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. மகராஷ்டிர நவநிர்மான் சேனா கட்சி 125 இடங்களிலும், விபிஏ கட்சி 200 இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தின. ஆனால், எந்த இடத்திலும் குறிப்பிடத்தக்க அளவு வாக்குகளை பெறவில்லை. ராஜ்தாக்கரேவின் மகன் அமித் தாக்கரே கூட மஹிம் தொகுதியில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். சிறிய கட்சிகள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்ததாது, பாஜக கூட்டணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்து இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்