ஒடிசா: சமையல் குக்கர் குடோனில் தீ விபத்து

ஒடிசாவில் சமையல் குக்கர் சேமித்து வைக்கும் குடோனில், நேற்றிரவு திடீரென ஏற்பட்ட தீயை அணைக்க 15 தீயணைப்பு வாகனங்கள் சென்றன.

Update: 2024-12-23 22:28 GMT

புவனேஸ்வர்,

ஒடிசாவின் புவனேஸ்வர் நகரில் சத்யா நகர் பகுதியில் சமையல் குக்கர் சேமித்து வைக்கும் குடோன் ஒன்று உள்ளது. இந்நிலையில், நேற்றிரவு திடீரென இந்த குடோனில் தீ விபத்து ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்ததும், 15 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ பகுதிக்கு சென்றன. தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இந்த விபத்து பற்றி தீயணைப்பு துறையின் டி.ஐ.ஜி. ரமேஷ் மஜி கூறும்போது, தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. மற்ற கட்டிடங்களுக்கு தீ பரவாமல் உறுதி செய்யப்பட்டு உள்ளது. 15 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ பகுதிக்கு கொண்டு வரப்பட்டு உள்ளன என கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்