பள்ளிகளில் 8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறை ரத்து

இறுதித் தேர்வில் தோல்வியடையும் மாணவர்களுக்கு 2 மாதங்களுக்குப் பிறகு மறுதேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-12-23 11:04 GMT

புதுடெல்லி,

பள்ளிகளில் 5 மற்றும் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களை பெயில் ஆக்கக் கூடாது என்ற கொள்கையை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி 5 மற்றும் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் கட்டாய தேர்ச்சி என்ற கொள்கை ரத்து செய்யப்பட்டுள்ளது.

தோல்வி அடைந்த மாணவர்களுக்கு இரண்டு மாதங்களுக்குள் மறு தேர்வு எழுதுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும். மறுதேர்வில், மீண்டும் தோல்வி அடைந்தால், அடுத்த வகுப்புக்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 மற்றும் எட்டாம் வகுப்பு வரையிலான தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள், தோல்வி அடைந்தவர்களாகவே கருதப்படுவார்கள்.

குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், தொடக்கக் கல்வி முடியும் வரை எந்தப் பள்ளியிலிருந்தும் மாணவர்களை வெளியேற்றக் கூடாது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. கேந்திரிய வித்யாலயா, நவோத்யாலா வித்யாலயா மற்றும் சைனிக் பள்ளிகள் உட்பட மத்திய அரசால் நடத்தப்படும் 3,000 பள்ளிகளுக்கு இந்த அறிவிப்பு பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வி என்பது மாநிலங்களிடம் உள்ளது என்பதால், மாநிலங்கள் இந்த விஷயத்தில் முடிவெடுக்கலாம்.

Tags:    

மேலும் செய்திகள்