சன்னி லியோன், ஜானி சின்ஸ் பெயரில் நடந்த மோசடி

சத்தீஸ்கரில் திருமணமான பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது

Update: 2024-12-23 07:41 GMT

பாஸ்டர்,

சத்தீஸ்கர் மாநில பா.ஜ.க அரசு சார்பில் திருமணமான பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதில் ஆயிரக்கணக்கானோர் பயன்பெற்று வரும் நிலையில், பயனாளிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில், சத்தீஸ்கரின் பாஸ்டர் மாவட்டம் தலுர் கிராமத்தைச் சேர்ந்த விரேந்திரா ஜோஷி என்பவர் ரூ.1,000 தொகையை பெறுவதற்கான அரசின் விண்ணப்பத்தில் சன்னி லியோன் - ஜானி சின்ஸ் தம்பதி என குறிப்பிட்டு தொகையை பெற்று மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து, உடனடியாக அந்த வங்கிக் கணக்கிற்கான உதவித் தொகை நிறுத்தப்பட்டதுடன், விரேந்திரா ஜோஷி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த மோசடி நடந்தது எப்படி என விசாரித்து வருவதாக பஸ்தார் மாவட்ட ஆட்சியர் ஹரிஷ் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்