கும்பம் - வார பலன்கள்

Update:2023-06-30 01:36 IST

நேர்மை தவறாத மனம் கொண்ட கும்ப ராசி அன்பர்களே!

செய்யும் காரியங்களில் எதிர்பார்த்த திருப்தியான சூழ்நிலை இல்லாமல் போகலாம். நிதிஉதவி பெற மேற்கொண்ட முயற்சிகளில், நண்பர்களால் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களில் சிலர் அதிக வருமானமுள்ள புதிய வேலைக்குச் செல்ல முயற்சி மேற்கொள்வார்கள். எதிர்பார்த்த கடன் உதவிகள் தள்ளிப்போகும். சொந்தத்தொழில் செய்பவர்களில் சிலருக்குப் புதிய வேலைகள் கிடைத்து, பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபடுவார்கள். கூட்டுத்தொழில் முயற்சியில் முன்னேற்றமான பலன்கள் ஏற்படலாம். புதிய கிளை தொடங்கும் எண்ணம் மேலோங்கும். குடும்பத்தில் அமைதி இருந்தாலும், சில சிறு பிரச்சினைகளும் உருவாகலாம். வேலைக்குப் போகும் பெண்கள், பயணங்களில் கவனமாக இருங்கள். கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் பெற்றாலும், எதிர்பார்க்கும் லாபம் இருக்குமா என்பது சந்தேகம்தான்.

பரிகாரம்:- இந்த வாரம் வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு செந்தாமரை மலர் மாலை சூட்டி, நெய் தீபம் ஏற்றுங்கள்.

மேலும் செய்திகள்