கும்பம் - வார பலன்கள்

Update:2023-08-25 01:12 IST

உறுதி மிகுந்த உள்ளம் கொண்ட கும்ப ராசி அன்பர்களே!

சில பணிகளில் முயற்சியின் பலன் தள்ளிப் போகலாம். அதிக செலவினால் கையில் உள்ள பொருள் கரைந்து, கடன் வாங்கி அவசரத் தேவைகளை சமாளிப்பீர்கள். உத்தியோகஸ்தர்களின் பணிகளில் சிறு மாறுதல் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். வெளியூர் பயணத்தின்போது பதிவேடுகளில் கவனம் தேவை. அனைவரிடமும் கனிவாக நடந்து கொள்ளுங்கள்.

சொந்தத் தொழிலில் வருமானம் அதிகரிக்கும். புதிய வாடிக்கையாளர் அறிமுகமும், அதனால் புதிய பணிகளும் கிடைக்கப்பெறும். கூட்டுத்தொழில் சிறப்பாக நடைபெறும். புதிய கிளைகள் தொடங்கும் எண்ணத்தை தள்ளிப்போடுவது நல்லது. பணியாளர்களை கண்காணிப்பது விரயத்தை தடுக்கும். குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும். கொடுக்கல் - வாங்கலில் கவனம் தேவை. கலைஞர்களுக்கு வாய்ப்புகள் வரிசை கட்டும்.

சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை விநாயகருக்கு அருகம்புல் மாலை சூட்டி வணங்குங்கள்.

மேலும் செய்திகள்