கும்பம் - வார பலன்கள்

Update:2023-09-29 01:45 IST

29.9.2023 முதல் 5.10.2023 வரை

முன்னேறும் ஆர்வம் கொண்ட கும்ப ராசி அன்பர்களே!

தீவிரமான முயற்சியோடு காரியங்களில் ஈடுபடுவீர்கள். தளர்வுகள் ஏற்பட்டாலும் உறுதியான மனதுடன் முயற்சிப்பீர்கள். வரவுகள் தாமதமானாலும் கைக்கு வந்து சேர்ந்துவிடும். உத்தியோகம் செய்பவர்களில் சிலருக்கு, பணி ஓய்வு பெற்றுவிட்டு, அதிக ஆதாயம் உள்ள நவீன தொழில் ஒன்றை தொடங்கும் எண்ணம் ஏற்படும். சொந்தத் தொழில் செய்பவர்கள், முதலில் செய்து கொடுத்த வேலையில் உள்ள குறையை நிவர்த்தி செய்ய வேண்டிய நிலை உருவாகும். பணிகளில் கவனம் செலுத்தாவிட்டால், வாடிக்கையாளரின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். கூட்டுத்தொழில் வியாபாரம் சுமாராக நடைபெறும். பழைய பாக்கிகள் தலைதூக்கும். குடும்பத்தில் குழப்பங்கள் தீரக்கூடிய காலம் இது. பெண்கள் எடுக்கும் முயற்சிக்கு ஆதரவு கிடைக்கும். கலைஞர்கள் தீவிர முயற்சியின் மூலம் புதிய வாய்ப்புகளைப் பெறுவார்கள்.

சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் செவ்வாய்க்கிழமை முருகனுக்கு சிவப்பு வண்ண மலர் மாலை சூட்டுங்கள்.

மேலும் செய்திகள்