முற்போக்கு குணம் நிறைந்த கும்ப ராசி அன்பர்களே!
வெள்ளி பகல் 1.06 மணி முதல் ஞாயிறு வரை சந்திராஷ்டமம் உள்ளதால், சில காரியங்களில் தொல்லை ஏற்படும். உத்தி யோகஸ்தர்கள் தங்களது வேலைகளில் மிகுந்த கவனமாக இருப்பது அவசியம். பதிவேடுகளை சரியான முறையில் பராமரிக்காமல், உயர் அதிகாரிகளின் கோபத்திற்கு இலக்காவீர்கள்.
சொந்தத் தொழிலில் எதிர்பார்க்கும் அபிவிருத்தி தடைப்படும். மூலப்பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக வாடிக்கையாளர்களுக்கு சரியான நேரத்தில் அவர்கள் தேவையை பூர்த்தி செய்ய இயலாது. கூட்டுத்தொழில் சுமாராக நடைபெறும். எதிர்பார்க்கும் லாபம் தாமதமாகும். குடும்பத்தில் பொருள் வரவு எதிர்பார்க்கும் அளவு இருக்காது. செலவுகளுக்கு நண்பர்களை எதிர்பார்க்கும் நிலை ஏற்படலாம். கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் பெற தீவிர முயற்சி மேற்கொள்வர்.
சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் செவ்வாய்க்கிழமை முருகனை மலர்களால் அர்ச்சித்து வழிபடுங்கள்.