எதையும் திட்டமிட்டு செய்யும் கும்ப ராசி அன்பர்களே!
முன்னேற்றமான பலன்களை அடையும் வாரம் இது. அவசியமான நேரத்தில் முக்கியமான நண்பர்கள் கண்களில் படமாட்டார்கள். நினைத்தபடி வேலைகளைச் செய்ய முடியாமல் தடங்கல்கள் வரலாம். உத்தியோகத்தில், கவனக்குறைவால் சில தொல்லைகளைச் சந்திக்க நேரிடும். சகப் பணியாளர்களின் குடும்ப விவகாரங்களில் தலையிட்டால் விபரீதங்கள் ஏற்படலாம். பணிகளில் கவனமாக இல்லாவிட்டால், உயர் அதிகாரிகளின் கோபப் பார்வைக்கு இலக்காக நேரிடும்.
சொந்தத் தொழில் செய்பவர்கள், பணிகளை விரைவாகச் செய்ய நவீன கருவிகளைப் பயன்படுத்துவர். கூட்டுத் தொழில் செய்பவர்கள், பணியாளர்களைக் கண்காணித்து அவர்களுக்குள் நிகழ இருந்த விரோதத்தைப் போக்குவீர்கள். குடும்பத்தில் பழைய கடன் தொல்லைகள் தலை காட்டும். கலைஞர்கள் சுறுசுறுப்பாக செயல்படுவர்.
சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் சனிக்கிழமை அனுமனுக்கு வெற்றிலை மாலை சூட்டி வழிபாடு செய்யுங்கள்.