கும்பம் - வார பலன்கள்

Update:2023-10-20 01:08 IST

20-10-2023 முதல் 26-10-2023 வரை

நண்பர்களுக்கு உதவும் கும்ப ராசி அன்பர்களே!

நீங்கள் மேற்கொள்ளும் செயல்கள் பலவற்றில் முன்னேற்றம் காணப்படும். என்றாலும், சிறு சிறு முயற்சிகளுக்கு தகுந்த நண்பர்களின் உதவியும் தேவைப்படும். பண வரவுக்கு முன்பாகவே செலவுகள் காத்திருக்கும். பக்தியில் ஏற்படும் நாட்டம், மன ஆறுதல் தரும். உத்தியோகத்தில் உள்ளவர்கள், பணியில் கவனமாக இல்லாவிட்டால் மேலதிகாரிகளின் கோபப் பார்வைக்கு இலக்காக நேரிடும். சக ஊழியரின் பணியையும் சேர்த்து செய்யும் சூழ்நிலை உருவாகலாம். சொந்தத் தொழிலில் வருமானம் பெருகும். வாடிக்கையாளரின் ரசனைக்கு ஏற்றவாறு வேலைகளை முடித்துக் கொடுத்துப் பாராட்டுப் பெறுவீர்கள். கூட்டுத்தொழிலில் எதிர்பார்த்த லாபம் இல்லாவிட்டாலும் வழக்கமான லாபம் குறையாது. குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படத்தான் செய்யும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களில் சுறுசுறுப்பு காட்டுவர்.

சிறப்புப் பரிகாரம்:-இந்த வாரம் செவ்வாய்க்கிழமை முருகப்பெருமானுக்கு சிவப்பு மலர் மாலை சூட்டுங்கள்.

மேலும் செய்திகள்