கும்பம் - வார பலன்கள்

Update:2023-10-13 01:25 IST

13-10-2023 முதல் 19-10-2023 வரை

கனிவான பேச்சு திறன் கொண்ட கும்ப ராசி அன்பர்களே!

வெள்ளிக்கிழமை முதல் ஞாயிறு காலை 6.35 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால், ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதாக இருப்பின் கவனம் தேவை. தளர்வடைந்த செயல்களில் நண்பர்களின் உதவி தேவைப்படும். உத்தியோகத்தில் சிலருக்கு அலுவலகத்தில் முக்கிய பொறுப்பு வந்து சேரும். சொந்தத் தொழிலில் முன்னேற்றமான போக்கு காணப்படும். புதிய வாடிக்கையாளரால், தொழில் ரீதியான முன்னேற்றம் கிடைக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் அதிக லாபம் பெறுவார்கள். வியாபாரத்தை விரிவாக்குவது பற்றி கூட்டாளிகளுடன் கலந்து ஆலோசிப்பீர்கள். குடும்பத்தில் பணநடமாட்டம் இருக்கும். சிறுசிறு கடன்கள் அனைத்தும் தீரும். தாய் வழி சொந்தங்களின் வருகை பயனுள்ளதாக இருக்கும். கலைஞர்கள் பணிகளுக்காக வெளியூர்களுக்கு செல்வர். பங்குச் சந்தை லாபம் தரும்.

சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் வியாழக்கிழமை குரு பகவானுக்கு வில்வ மாலை சூட்டி வழிபடுங்கள்.

மேலும் செய்திகள்