27-10-2023 முதல் 2-11-2023 வரை
பிறரை எடைபோடத் தெரிந்த கும்ப ராசி அன்பர்களே!
செய்யும் காரியங்களில் வெற்றியும், அதன் மூலம் பண வரவும் ஏற்படும். தொழில் சம்பந்தமான முன்னேற்றமும், உயர்வான பதவி களும் சிலர் பெறக்கூடும். உத்தியோகத்தில் சிலருக்கு, விரும்பிய இடமாற்றமும், பதவி உயர்வும் கிடைக்கும். ஒரு சிலருக்கு சகப் பணியாளர்களின் வேலையையும் செய்ய நேரிடும். சொந்தத் தொழிலில் வேலைப்பளு அதிகரிக்கும். இருப்பினும் அதற்கேற்ற வருமானம் வந்து சேரும். கூட்டுத்தொழிலில் வியாபாரம் நன்கு நடைபெற்று எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கக்கூடும். பணியாளர்களின் திறமையைப் பாராட்டி ஊக்கத்தொகை, சம்பள உயர்வு வழங்கி உற்சாகமூட்டுவீர்கள். குடும்பத்தில் பண வரவு அதிகரிக்கும். மங்கல நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். கலைஞர்கள், பிரபல நிறுவனத்தில் இருந்து கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்வீர்கள்.
சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் வெள்ளிக்கிழமை துர்க்கை அம்மனுக்கு செவ்வரளி மாலை சூட்டுங்கள்.