கும்பம் - வார பலன்கள்

Update:2023-06-02 01:21 IST

பேச்சுத் திறமையால் பிறரைக் கவரும் கும்ப ராசி அன்பர்களே!

சிறிய பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள். தொல்லை தந்தவர்கள் தோள் கொடுத்து உதவ முன்வருவர். நட்பு வட்டாரங்களால் ஓரளவு ஆதாயம் உண்டு. ஒருசிலர் வார்த்தை ஜாலங்களால் உங்களிடம் திறமையாக பேசுவார்கள். அதை நம்பி அவர்களுக்கு எந்த வாக்குறுதியும் கொடுத்து விடாதீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு, நினைத்த காரியம் நிறைவேறுவதில் சிரமம் ஏற்படும். இருந்தாலும் உங்களின் கடின உழைப்பால் மேன்மை அடைவீர்கள். உயர் அதிகாரிகளுடன் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும், இறுதியில் அனைத்து காரியங்களிலும் வெற்றியே கிடைக்கும். சினிமாத் துறையில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்பு கிடைப்பதில் தாமதம் ஏற்படும். எனவே இருக்கும் வாய்ப்புகளைக் கொண்டு வருமானம் ஈட்டுவீர்கள். வீடு, வாகனம் வாங்கும்போது கவனமாக இருங்கள். பணத் தேவை அதிகரிக்கும்.

பரிகாரம்:- இந்த வாரம் முழுவதும் இஷ்ட தெய்வத்தை வழிபட்டு வருவதன் மூலமாக நிம்மதியைப் பெற இயலும்.

மேலும் செய்திகள்