கும்பம் - வார பலன்கள்

Update:2023-05-26 01:41 IST

கலை உணர்வும், கற்பனைத் திறனும் பெற்ற கும்ப ராசி அன்பர்களே!

திங்கள் காலை 7.39 மணி முதல் புதன் மாலை 4.59 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அலுவலகத்தில் செல்வாக்கு அதிகமாகும். சிலர் பதவி உயர்வும், சம்பள உயர்வும் பெறக்கூடும். சக ஊழியர்களின் ஆதரவு இருக்கும்.

சொந்தத் தொழில் செய்பவர்களில் சிலருக்கு பாராட்டுகள் கிடைக்கலாம். சிலருக்கு அரசாங்கம் மூலம் பண உதவிகள் கிடைக்கும் நிலை ஏற்படலாம். கூட்டுத் தொழில் செய்பவர்கள் பணியாளர்களின் ஒத்துழைப்பு மூலம் வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பர். புதிய கிளை தொடங்கத் திட்டமிடுவார்கள். குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை காணப்படும். வேலைக்குப் போகும் பெண்களுக்கு பொருள் வரவு ஏற்படக் கூடும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களில் பணியாற்றுவர்.

பரிகாரம்:- இந்த வாரம் புதன்கிழமை சுதர்சன பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வணங்குங்கள்.

மேலும் செய்திகள்