நீதிநெறிகளுக்கு கட்டுப்பட்ட கும்ப ராசி அன்பர்களே!
எதிர்கால முன்னேற்றத்துக்கு நண்பர்களின் உதவியுடன் திட்டமிடுவீர்கள். சிலர் கேட்ட உதவிகளைச் செய்ய முடியாமல் அவர்களின் அதிருப்திக்கு ஆளாக நேரலாம். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் அதிக கவனமாக இருக்க வேண்டும். நண்பர்களின் சொந்த விஷயங்கள் பற்றி, அலுவலக நேரத்தில் பேசாமல் இருப்பது நல்லது. சொந்தத்தொழில் செய்பவர்கள், வாடிக்கையாளர்களின் தேவையை புரிந்து கொண்டு செயல்படுங்கள். கூட்டுத்தொழிலில் லாபம் சுமாராக இருக்கலாம். வியாபார தலத்தை விரிவுபடுத்த கூட்டாளிகளுடன் கலந்து ஆலோசிப்பீர்கள். குடும்பத்தில் வீண் செலவுகளைக் குறைத்து சேமிப்பைப் பெருக்கத் திட்டமிடுவீர்கள். குடும்பத்தில் பெண்களிடம் வீண் வாதங்களை தவிர்த்துவிடுங்கள். சகக்கலைஞர்களிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள். பங்குச்சந்தை நல்ல பலன் தரும்.
பரிகாரம்:- இந்த வாரம் வெள்ளிக்கிழமை நவக்கிரகத்தில் உள்ள சுக்ர பகவானுக்கு நெய் தீபமிட்டு வணங்குங்கள்.