கும்பம் - வார பலன்கள்

Update:2023-04-07 01:41 IST

சிறப்பான சிந்தனையால் உயரும்கும்ப ராசி அன்பர்களே!

முன்னெடுக்கும் காரியங்கள் சிலவற்றில் வெற்றியடைவீர்கள். எதிர்பார்க்கும் ஆதாயம் கிடைப்பதில் சிறிது தாமதம் ஏற்படலாம். நெருங்கிய நண்பர் ஒருவர் உதவி கேட்டு உங்களிடம் வரக்கூடும். மாமன், மைத்துனர் வழியில் எதிர்பாராத நன்மைகள் நடைபெறும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் உயர் அதிகாரிகளின் ஆதரவோடு சில சலுகைகளை பெறுவீர்கள். சிலருக்கு அலுவலகம் மூலமாக எதிர்பார்க்கும் கடன்கள் கிடைக்கலாம். சொந்தத் தொழில் செய்பவர்கள், வாடிக்கையாளரின் விருப்பப்படி அவசரமான பணி ஒன்றை வேகமாகச் செய்து முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். குடும்பம் சீராக நடைபெறும். சிறு சிறு பிரச்சினைகளை எளிதாக சமாளித்து விடுவீர்கள். சகோதர வழி உறவுகளில் தலையிடுவதன் காரணமாக மன வருத்தம் உண்டாகலாம். கலைஞர்களுக்கு, போதுமான வருமானம் வந்து, உற்சாகத்தை அளிக்கும்.

பரிகாரம்:- இந்த வாரம் வெள்ளிக்கிழமை, மகாலட்சுமிக்கு செந்தாமரை மலர் சூட்டி, நெய்தீபம் ஏற்றுங்கள்.

மேலும் செய்திகள்