காரியத்தில் கண்ணும் கருத்துமாக இருக்கும் கும்ப ராசி அன்பர்களே!
உத்தியோகஸ்தர்கள் இடமாற்றம். பதவி உயர்வு போன்றவற்றை பெற சரியான தருணம் இது. தொழில் செய்பவர்கள், தங்கள் துறையில் முன்னேற்றத்தையும், திருப்திகரமான வருமானத்தையும் பெற்று மகிழ்வீர்கள். உங்கள் செயல்பாடுகள் மிகுந்த வேகம் பெறும். மனதில் உற்சாகமும், தன்னம்பிக்கையும் காணப்படும். உங்கள் பிரச்சினைகள் யாவும் விலகி நிம்மதி காண்பதற்கான அறிகுறிகள் தெரியும்.
கலைஞர்களுக்குக் கிடைக்கக்கூடிய புதிய வாய்ப்புகள், பொருளாதார உயர்வுக்கு வழி வகுப்பவையாக அமையும். வியாபாரம் திருப்தி தரும் வகையில் லாபகரமாகவே நடைபெற்று வரும். குடும்பத்தில் குதூகலத்திற்குக் குறைவிருக்காது. மகன் அல்லது மகளால் தோன்றிய மனக்கலக்கம் மறையும். புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடாமல், தற்போதையை பணிகளையே திட்டமிட்டு நிதானமாக செயல்படுத்துங்கள்.
பரிகாரம்:- இந்த வாரம் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அணிவித்து வழிபட்டு வாருங்கள்.