கும்பம் - வார பலன்கள்

Update:2023-03-03 01:43 IST

வார ராசி பலன்கள் 3.3.2023 முதல் 9.3.2023 வரை

பரந்த மனப்பான்மை உடைய கும்ப ராசி அன்பர்களே!

புதன்கிழமை காலை 9.42 முதல் வியாழக்கிழமை வரை சந்திராஷ்டமம் உள்ளதால், ஜாமீன் கையெழுத்து போடுவதை தவிர்ப்பது நல்லது.

உத்தியோகஸ்தர்களில் சிலர், உயரதிகாரிகளின் ஆதரவுடன் அலுவலகத்தில் சில சலுகைகளைப் பெறுவார்கள். சம்பள உயர்வும், இடமாற்றமும் கிடைக்கும். சொந்தத்தொழில் ஆதாயம் தருவதாக இருக்கும். புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவதால் பணிச் சுமை அதிகரிக்கும். கூட்டுத்தொழில் நன்றாக நடைபெறும். கூட்டாளி களின் ஆலோசனைப்படி புதிய தொழில் தொடங்க முயற்சிப்பீர்கள். பங்குச்சந்தையில் லாபம் அதிகரிக்கும்.

கலைஞர்கள், தங்கள் வாழ்வில் நல்ல திருப்பம் காண்பார்கள். குடும்பத்தில் உற்சாகத்திற்கு குறைவிருக்காது. உறவுகளிடம் ஏற்படும் பிரச்சினைகளை நிதானமாக செயல்பட்டு சுமுகமாக தீர்ப்பீர்கள். சுபகாரியங்கள் சம்பந்தமான பேச்சுகளைத் தொடங்குவீர்கள். பெண்களுக்கு கையிருப்பு நல்ல விதத்தில் செலவழியும்.

பரிகாரம்:- ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவானை வழிபடு வதுடன், விநாயகரையும் வழிபட்டு வந்தால் வளர்ச்சி கூடும்.

மேலும் செய்திகள்