கும்பம் - வார பலன்கள்

Update:2023-02-03 01:19 IST

உறுதியான எண்ணம் கொண்ட கும்ப ராசி அன்பர்களே!

வியாழக்கிழமை சந்திராஷ்டமம் உள்ளதால், கொடுக்கல் - வாங்கலில் கவனம் அவசியம். தீவிர முயற்சியால் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். சில காரியங்கள் எண்ணத்திற்கு மாறாக நடக்கக்கூடும். உத்தியோகத்தில் சிலருக்கு, அலுவலகத்தில் இருந்து வரவேண்டிய வரவுகள் தடைபடலாம்.

சொந்தத்தொழிலில், அவசரமாகச் செய்து கொடுத்த வேலை ஒன்றில் ஏற்பட்ட பிரச்சினையை சரி செய்து கொடுக்க வேண்டியதிருக்கும். பணவரவு இருந்தாலும், செலவு அதிகமாக வந்துசேரும். கூட்டுத்தொழில் சுமாராக நடைபெற்றாலும், வழக்கமான லாபம் கிடைக்கும். பங்குச்சந்தை வியாபாரத்தில் சுமாரான லாபம் ஈட்டுவீர்கள்.

கலைஞர்கள், தரகர்கள் மூலம் முயற்சிப்பதை விட, நேரடியாக முயற்சித்தால் வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கும். குடும்பத்தில் செலவு அதிகரித்தாலும், அதற்கேற்ற வருமானமும் வந்தடையும்.

வழிபாடு:- செவ்வாய்க்கிழமை அன்று முருகப்பெருமானுக்கு, தீபமேற்றி வழிபட்டால் முன்னேற்றமான வாழ்வு உண்டாகும்.

மேலும் செய்திகள்