கும்பம் - வார பலன்கள்

Update: 2023-01-19 20:00 GMT

கலைகளில் நாட்டம் கொண்ட கும்ப ராசி அன்பர்களே!

உத்தியோகஸ்தர்கள் விரும்பிய இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். ஆனால் அவை நன்மை தரும் விதமாக அமையுமா என்பது சந்தேகம்தான். ஒரு சிலருக்கு குடியிருக்கும் வீட்டை மாற்ற வேண்டிய நிலை ஏற்படலாம். புது வீடு கட்டி கிரகப் பிரவேசம் செய்ய திட்டமிட்டவர்கள், அதற்கான முயற்சிகள் கால தாமதமாவதை நினைத்து வருத்தப்படுவர். எல்லாம் நன்மைக்கே என்று நினையுங்கள்.

பணிக்கு செல்லும் பெண்களுக்கு எதிர்பாராத வகையில் அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டு. சகோதர வழியில் சிறுசிறு மனக்கசப்பு ஏற்பட்டு மறையும்.

நீண்ட காலத்திற்குப் பிறகு, பால்ய நண்பரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். பிற மொழி பேசும் ஒருவரின் மூலம் நன்மை வந்துசேரும். நீதிமன்ற வழக்குகள் சாதகமாக அமையும். பெண்களில் சிலர் சுபகாரியங்களில் கலந்துகொள்வர்.

பரிகாரம்:- இந்த வாரம் புதன்கிழமை, பெருமாளுக்கு நெய் தீபம் ஏற்றி வணங்கினால் வாழ்வில் முன்னேறலாம்.

மேலும் செய்திகள்