கும்பம் - வார பலன்கள்

Update:2023-01-06 01:48 IST

செய்யும் காரியங்களில் துடிப்புடன் செயலாற்றும் கும்ப ராசி அன்பர்களே!

வியாழக்கிழமை மாலை 6.56 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால், பயணத்தில் கவனம் தேவை. இந்த வாரம் நல்ல அனுகூலமான பலன்களே நடைபெறும். உத்தியோகத்தில் விரும்பிய இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும்.

தொழில் செய்பவர்கள், வேகமான வளர்ச்சியைக் காண்பார்கள். வியாபாரம் நன்கு விருத்தியாவதுடன், வாடிக்கையாளர்களிடமும் நன்மதிப்பு உண்டாகும். கலைஞர்கள் புதிய வாய்ப்புகளைப் பெறுவார்கள். ஏற்கனவே வராமல் இருந்த பழைய சம்பளம் மொத்தமாக வந்துசேரும்.

பெண்களின் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். நீண்ட காலம் எதிர்பார்த்த ஒரு நல்ல செய்தி வந்து மகிழ்ச்சிப்படுத்தும். பிரிந்த உறவுகளை சேர்க்க நீங்கள் எடுத்த முயற்சி வெற்றியாகும். குடும்பத்தில் கணவன் - மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகளால் பிரச்சினைகள் உருவாகலாம்.

பரிகாரம்:- இந்த வாரம் புதன்கிழமை, பெருமாளுக்கு நெய் தீபம் ஏற்றி வணங்கினால் ெதால்லைகள் அகலும்.

மேலும் செய்திகள்