கும்பம் - வார பலன்கள்

Update: 2022-12-22 19:55 GMT

சாமர்த்தியமாகப் பேசி காரியம் சாதிக்கும் கும்ப ராசி அன்பர்களே!

எதிலும் கவனமாக நடந்து கொள்ள வேண்டிய வாரம் இது. வீடு, வாகனம் வாங்குவதிலும், வீடு கட்டுவதிலும் மிகுந்த கவனமாக இருங்கள். உத்தியோகஸ்தர்களுக்கு, அலுவலகம் தொடர்பான விஷயங்களில் எவ்வித முன்னேற்றமும் ஏற்பட வாய்ப்பில்லை. எனினும் உயர் அதிகாரிகளின் ஆதரவு இருப்பதால் சில சலுகைகள் கிடைக்கக்கூடும்.

தொழில் செய்பவர்களுக்கு, வேலைப்பளு கூடுதலாக இருக்கும். ஆனால் அதற்கேற்ற வருமானம் வந்து சேராது. கூட்டுத் தொழில் வியாபாரம், ஏற்ற இறக்கமாக இருக்கும்.

கலைஞர்களுக்குப் புதிய வாய்ப்புகள் அமைந்தாலும், அது பொருளாதார ரீதியாக கைகொடுக்காது. அரசியல் துறையில் சிலருக்கு, முக்கியமான பொறுப்பு கிடைக்க வாய்ப்புண்டு. பெண்கள் குடும்பத்தில் நற்பெயர் பெறுவார்கள். அதே நேரம் அக்கம் பக்கத்தினருடன் வீண்வாதத்தை தவிர்ப்பது நல்லது.

பரிகாரம்:- வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை நைவேத்தியம் செய்து வழிபட்டால் சிக்கல்கள் அகலும்.

மேலும் செய்திகள்