கும்பம் - வார பலன்கள்

Update:2022-12-16 01:28 IST

கலை நுணுக்கத்தோடு செயல்படும் கும்ப ராசி அன்பர்களே!

வெள்ளிக்கிழமை பகல் 11.20 மணி முதல் ஞாயிறுக்கிழமை இரவு 7.13 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால், எதிலும் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள், தங்கள் பணிகளில் கவனமாக இல்லாவிட்டால் உயரதிகாரிகளின் கோபப் பார்வைக்கு இலக்காக நேரிடும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சொந்தத்தொழிலில், ஒவ்வொரு பணியும் அவசரப்படுத்தும். அதனால் ஓய்வின்றி உழைப்பீர்கள். கூட்டுத்தொழிலில் வழக்கமான லாபம் வந்துசேரும். பங்குச்சந்தை வியாபாரம் சுமாராக நடைபெறும்.

கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு வருமானம் குறையும். கடினமான பணிகளில் ஈடுபட்டு பிரச்சினைகளை சமாளிக்கும்படி நேரலாம். குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகளைப் பெண்களே சாமர்த்தியமாகச் சமாளித்து விடுவார்கள். கடன் தொல்லைகள் இருந்தாலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது.

பரிகாரம்:- திங்கட்கிழமை சிவன் சன்னிதியில் நெய் தீபம் ஏற்றினால், பிரச்சினைகள் எளிதில் தீரும்.

மேலும் செய்திகள்