கும்பம் - வார பலன்கள்

Update:2022-12-02 01:21 IST

எல்லோரையும் சமமாக கருதும் மனம் கொண்ட கும்ப ராசி அன்பர்களே!

நண்பர்கள் உங்கள் பணிகளில் உதவியாக இருப்பார்கள். வரவேண்டிய இனங்கள் தாமதமின்றி கைக்குக் கிடைக்கும். வீடு அல்லது மனை வாங்கும் யோகம் சிலருக்கு வாய்க்கும். உத்தியோகஸ்தர்கள், உயரதிகாரிகளின் ஆதரவைப் பெற்று அலுவலகத்தில் சில சலுகைகளைப் பெறுவார்கள். சம்பள உயர்வும், இடமாற்றமும் கிடைக்கும். சொந்தத் தொழில் ஆதாயம் தருவதாக இருக்கும். புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவதால் வேலைச் சுமை அதிகரிக்கும். கூட்டுத் தொழில் நன்றாக நடைபெறும். குடும்பத்தில் உற்சாகத்திற்கு குறைவிருக்காது. சுபகாரியங்கள் சம்பந்தமான பேச்சுகளைத் தொடங்குவீர்கள். பெண்களின் கையிருப்பு நல்லவிதத்தில் செலவழியும். கலைஞர்கள் வாழ்வில் நல்ல திருப்பம் இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். பங்குச்சந்தையில் லாபம் அதிகரிக்கும்.

பரிகாரம்:- ஞாயிற்றுக்கிழமை அன்று சூரிய வழிபாடு செய்வதுடன், விநாயகப் பெருமானையும் வழிபடுங்கள்.

மேலும் செய்திகள்