கும்பம் - வார பலன்கள்

Update: 2022-11-24 19:55 GMT

பெரியோர்களிடம் பணிவு காட்டும் கும்ப ராசி அன்பர்களே!

கடன் பிரச்சினைகள் குறையத் தொடங்கும் வாரம் இது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல திருப்பம் வந்து சேரும். மேல் அதிகாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள்.

தொழில் செய்பவர்கள், தங்களது துறையில் ஓரளவு வளர்ச்சியைக் காண்பார்கள். வாடிக்கையாளர்களுக்கு தேவையானதை உரிய நேரத்தில் செய்து கொடுத்து பாராட்டு பெறுவீர்கள். கூட்டுத் தொழில் வியாபாரம் போதுமான வருமானத்தை பெற்றுத் தரும். கூட்டாளிகளில் ஒருவர் உங்களை விட்டு பிரிந்து செல்ல நேரிடும். புதிய முதலீட்டாளரை அந்த இடத்தில் அமர்த்துவீர்கள்.

பெண்களுக்கு வேலைப்பளு அதிகம் இருந்தாலும், பிரச்சினை களை சமாளிக்கும் ஆற்றலால் நல்ல பெயர் எடுக்க முடியும். வழக்கு விஷயங்கள் சாதகமாகும். ஆரோக்கிய பிரச்சினைகள் அகலும். பிள்ளைகளால் உதிரி வருமானம் வந்து சேரும்.

பரிகாரம்:- வியாழக்கிழமை ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சூட்டி வழிபட்டால் ஆரோக்கியம் விருத்தியாகும்.

மேலும் செய்திகள்