நீதி நெறிகளுக்குக் கட்டுப்படும் கும்ப ராசி அன்பர்களே!
சனிக்கிழமை முதல் திங்கள் பகல் 11.26 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால், பண வரவில் தாமதம் ஏற்படும். வெளிநாட்டுப் பயணங்கள் நல்லவிதமாக முடியும். சொந்தத் தொழிலில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சொத்துக்கள் காரணமாக குடும்பத்தில் சிறு குழப்பம் உண்டாகும். எந்தக் காரியத்தில் இறங்கும் முன்பும் ஒரு முறைக்கு இருமுறை சிந்தித்து முடிவெடுங்கள். ஆன்மிக நாட்டம் அதிகமாகும். சிரமங்கள் இருந்தாலும் எடுத்த காரியம் கட்டாயம் கைகூடும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு, பிரபல நிறுவனங்களில் இருந்து புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகத்தில், அதிகாரிகள் சாதகமாக இருந்தாலும் எல்லாவற்றையும் வெளிப்படையாக பேச வேண்டாம். பொருட்களை பாதுகாப்பாக வைத்துவிட்டு வெளியே செல்லுங்கள்.
பரிகாரம்: செவ்வாய்க்கிழமை முருகப்பெருமானுக்கு நெய் தீபமேற்றி வணங்கினால் தீமைகள் அகலும்.