தர்மம் செய்வதில் விருப்பமுள்ள கும்ப ராசி அன்பர்களே!
காரியங்களில் கவனம் செலுத்தி முன்னேற்றமான பலனை அடைவீர்கள். தடைகளால் தாமதமான செயலை, நண்பர் துணையோடு வெல்வீர்கள். உத்தியோகத்தில் சிலர், தங்கள் பொறுப்பில் உள்ள பதிவேடுகளின் மீது கவனமாக இருப்பது நல்லது.
சொந்தத் தொழில் செய்பவர்கள், வாடிக்கையாளர்களின் நன் மதிப்பை பெறுவதற்காக பணியில் சுறுசுறுப்பாக இயங்குவார்கள். கூட்டுத் தொழில் நல்ல லாபத்துடன் உயர்வடையும். வியாபாரத்தை விரிவுபடுத்துவது பற்றி ஆலோசிப்பீர்கள்.
குடும்பத்தில் பணப் பிரச்சினை தலைகாட்டலாம். வீட்டு பெண்கள் அதனை சமாளித்து விடுவார்கள். கலைத்துறையில் உள்ளவர்கள் பணியில் கவனமாக ஈடுபடுங்கள். பிரபல நிறுவனத்தில் சேர, சகக் கலைஞர்கள் மூலமாக முயற்சிப்பீர்கள். பங்குச்சந்தை வியாபாரம் நல்ல முறையில் நடைபெறும். பண வரவில் முதலீடு வளரும்.
பரிகாரம்: சுக்ர பகவானுக்கு வெள்ளிக்கிழமை அன்று நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் செல்வமும், சிறப்பும் வந்துசேரும்.