கும்பம் - வார பலன்கள்

Update:2022-11-04 01:27 IST

உற்சாகமாக காரியங்களைச் செய்யும் கும்ப ராசி அன்பர்களே!

பல செயல்கள் உங்கள் விருப்பம் போல நடைபெறுவதால் மனதில் உற்சாகம் கூடும். உத்தியோகத்தில் உள்ளவர்களில் சிலருக்கு எதிர்பார்த்த கடன்தொகை கிடைத்து பாதியில் நிறுத்தியிருந்த பணியைத் தொடருவார்கள். சொந்தத் தொழில் செய்பவர்கள், புதிய வாடிக்கையாளர் வேலையை நவீனக் கருவிகளின் உதவியுடன் விரைவாகச் செய்து கொடுப்பார்கள். கூட்டுத்தொழில் நன்றாக நடைபெறும். தொழிலை விஸ்தரிப்பது பற்றி கூட்டாளிகளுடன் கலந்தாலோசித்து முடிவெடுப்பது நன்மை தரும். பங்குச்சந்தை வியாபாரம் நன்கு நடைபெறும். எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். கலைத் துறையினர் புதிய ஒப்பந்தங்களில் பங்குபெற வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். பண வரவுகள் மகிழ்வளிப்பதாக இருக்கும். குடும்பத்தில் ஏற்படும் தொல்லைகளை, பெண்களே சமாளித்துக் கொள்வார்கள்.

பரிகாரம்:- சனி பகவானுக்கு சனிக்கிழமையில் நல்லெண்ணெய் தீபமிட்டு வழிபட்டால் தொல்லைகள் நீங்கும்.

மேலும் செய்திகள்