கும்பம் - வார பலன்கள்

Update: 2022-10-13 20:26 GMT

இந்த வாரம் நினைத்த காரியங்களை நினைத்தது போல நடத்தி நிம்மதி பெறுவீர்கள். இருந்தாலும் சில பிரச்சினைகளில் இருந்து ஒதுங்கியிருப்பது நல்லது. உத்தியோகத்தில் இடமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. வரவேண்டிய பணம் கைக்குக் கிடைத்து கடன்களைத் தீர்க்க முற்படுவீர்கள். சொந்தத்தொழில் செய்பவர்கள் உற்சாகத்தோடு பணிகளில் ஈடுபடுவீர்கள். கூட்டுதொழில் சிறப்பாக நடைபெற்று நல்ல லாபம் பெறுவீர்கள். குடும்பத்துக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். நண்பர்களிடம் இருந்த விரோத மனப்பான்மை மாறி சகஜநிலை உருவாகும். கலைஞர்கள் தங்கள் பணிகளில் முன்னேற்றம் காண்பர். புதிய வாய்ப்புகள் மூலம் பணம் வரும். பங்குச்சந்தை வியாபாரம் லாபத்தை தரும். இந்த வாரம் புதன்கிழமை பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுவது செய்வது பலனளிக்கும்.

மேலும் செய்திகள்