எதிர்பார்த்தபடி பணவரவு வந்து மகிழ்வளிக்கும். உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தொழில் செய்பவர்களுக்கு, வாடிக்கையாளர் மூலம் நன்மைகள் வந்துசேரும். குடும்பத்தில் சிறிய கடன் தொல்லை அகலும். குல தெய்வ வழிபாட்டுக்கு குடும்பத்தினருடன் திட்டமிட்டபடி பயணம் மேற்கொள்வீர்கள். இந்த வாரம் வியாழக்கிழமை, தட்சிணாமூர்த்திக்கு வில்வ மாலை அணிவித்து வழிபட்டு வாருங்கள்.