வரவை விட செலவு அதிகரிக்கும். பலதரப்பட்ட மனிதர்களின் சந்திப்பால் அனுகூலம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு, பொறுப்பான பதவிகள் வந்துசேரும். வீண் பேச்சுகளைத் தவிர்த்திடுங்கள். நீங்கள் செய்யும் தொழில் மேம்பாடு அடையும். குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை காணப்படும். பெண்களின் சேமிப்பு நல்ல விதத்தில் செலவழியும். இந்த வாரம் சனிக்கிழமை, ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சூட்டி வணங்கி வாருங்கள்.