கும்பம் - வார பலன்கள்

Update:2023-08-11 01:25 IST

சாமர்த்தியம் நிறைந்தவராக விளங்கும் கும்ப ராசி அன்பர்களே!

அக்கம் பக்கத்தினர் குடும்ப விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. அதிகச் செலவாகும் என்று நினைத்த காரியம், குறைந்த செலவிலேயே முடிவுக்கு வரலாம். மனை, வீடு வாங்குவதற்குப் போட்ட திட்டம் நிறைவேறும். உத்தியோகஸ்தர்கள், சக ஊழியரின் பணியையும் சேர்த்து செய்யும் நிலை ஏற்படும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு, பணிகள் சுறுசுறுப்பாக நடைபெறும். கூட்டுத் தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வந்துசேரும். கூட்டாளிகளுடன் பணியாளர்களின் கோரிக்கைகள் குறித்து விவாதித்து முடிவெடுப்பீர்கள். குடும்பத்தில் பிரச்சினைகள் இருந்தாலும், மனைவி வழி உறவுகள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கலாம். குலதெய்வ வழிபாடு செய்ய திட்டமிடுவீர்கள். கலைஞர்கள், பல காலமாக எதிர்பார்த்த நிறுவனங்களில் இருந்து புதிய ஒப்பந்தம் வரும்.

சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் திங்கட்கிழமை சிவபெருமான் கோவிலில் அம்மனுக்கு வெண்மையான மலர் சூட்டுங்கள்.

மேலும் செய்திகள்