கும்பம் - வார பலன்கள்

Update:2023-08-04 00:57 IST

4.8.2023 முதல் 10.8.2023 வரை

மலர்ந்த முகமும்கனிவான பேச்சும் கொண்ட கும்ப ராசி அன்பர்களே!

செய்யும் செயல்கள் பலவற்றில் வெற்றிகரமான பலன்களை அடைவீர்கள். தளர்வடைந்த செயல்களை நண்பர்களின் உதவியோடு செய்து முடிப்பீர்கள். திட்டமிட்டபடி வரவேண்டிய பணம் வந்து சேரும். கடந்த காலத்தில் நடந்த இழப்பு ஒன்றை ஈடுகட்ட முயற்சிப்பீர்கள்.

உத்தியோகத்தில் சிலருக்கு அலுவலகத்தில் முக்கிய பொறுப்புகள் வந்து சேரும். சக ஊழியர்கள் ஒத்துழைப்பு தருவர். சொந்தத் தொழிலில் முன்னேற்றமான போக்கு காணப்படும். புதிய நபர் ஒருவரால் வருமானம் அதிகரிக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்கள், வியாபாரத்தில் அதிக லாபம் பெறுவார்கள். கூட்டாளிகளுடன், வியாபார தலத்தை விரிவாக்குவது பற்றி ஆலோசிப்பீர்கள். குடும்பத்தில் பண நடமாட்டம் இருக்கும். சிறு கடன்கள் முடிவுக்கு வரும். கலைஞர்கள் பணிகளில் கலந்துகொள்ள வெளியிடங்களுக்குப் பயணமாவார்கள்.

சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் வியாழக்கிழமை குரு பகவானுக்கு நெய் தீபம் ஏற்றிவைத்து வணங்குங்கள்.

மேலும் செய்திகள்