கும்பம் - வார பலன்கள்

Update:2023-07-28 01:13 IST

நேர்மையான முறையில் வெற்றி காணும் கும்ப ராசி அன்பர்களே!

தன்னம்பிக்கையும் தைரியமும் கொண்டு செயல்பட்டு, முன்னேற்றத்தைப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் கடமைகளில் கவனமாக இருக்க வேண்டிய நேரம் இது. எதிர்பார்ப்புகளை சிறிது காலத்திற்குத் தள்ளிப் போடுவது நல்லது. சொந்தத் தொழில் செய்பவர்கள், வாடிக்கையாளரிடம் சுமுகமாக நடந்துகொள்ளாவிட்டால், வருமானத்தில் பெரிய இழப்பை சந்திக்க நேரிடும். கூட்டுத்தொழில் நன்றாக நடைபெறும். பணியாளர்களின் செயல்களை அவ்வப்போது கண்காணிப்பது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். அவ்வப்போது சில பிரச்சினைகள் ஏற்பட்டாலும், அவற்றை சமாளித்து விடுவீர்கள். இல்லத்தில் சுபகாரியங்கள் நடத்த முயற்சிப்பீர்கள். பெண்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது முக்கியமானது. கலைஞர்கள் ஓரளவு நன்மையடைவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் வரிசையாக வரும்.

சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் வெள்ளிக்கிழமை அம்மனுக்கு மலர் மாலை அணிவித்து, நெய் தீபமிடுங்கள்.

மேலும் செய்திகள்