கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் கும்ப ராசி அன்பர்களே!
ஞாயிறு முதல் செவ்வாய்க்கிழமை காலை 8.26 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் பயணங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு, அலுவலகத்தில் எதிர்பார்க்கும் பண உதவி கிடைக்கும். சொந்தத் தொழில் புரிபவர்கள், அதிக லாபம் பெற்றாலும் செலவுகளும் இருக்கலாம். வாடிக்கையாளரிடம் சுமூகமாக நடந்து கொள்வது அவசியம்.
கூட்டுத்தொழிலில் உள்ளவர்கள் அவ்வப்போது தொழில் வளர்ச்சியைப் பற்றி கூட்டாளிகளுடன் ஆலோசிப்பது நல்லது. குடும்பத்தில் தன வரவும், செலவுகளும் இருக்கும். தடைபட்டிருந்த சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். குடும்பத்தினருடன் ஆன்மிகப் பயணம் செல்ல தீட்டிய திட்டம் நிறைவேறும். கலைத்துறையினர் நல்ல வாய்ப்புகளைப் பெறுவர். புதிய ஒப்பந்தங்கள் மூலமாக கணிசமான வருவாய் கிடைக்கும். பங்குச்சந்தை வியாபாரத்தில் லாபம் வந்துசேரும்.
பரிகாரம்:- இந்த வாரம் புதன்கிழமை புத பகவானுக்கு பச்சை பயிறு சுண்டல் நைவேத்தியம் செய்து வழிபடுங்கள்.