கும்பம் - வார பலன்கள்

Update:2023-07-07 00:46 IST

07-07-2023 முதல் 13-7-2023 வரை

உறுதிமிக்க நெஞ்சம் கொண்ட கும்ப ராசி அன்பர்களே!

நீங்கள் எடுத்துக் கொண்ட செயல்கள் சிலவற்றில் முன்னேற்றமான பலனைக் காண்பீர்கள். தளர்வடைந்த செயல்களுக்கு தக்க மனிதர்களின் உதவி கிடைக்காமல் போகலாம். வரவேண்டிய தனவரவுகள் சிறிது காலம் தாமதம் ஆகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகமாகலாம். சக நண்பரின் வேலைகளையும் சேர்த்து செய்யும் நிலை ஏற்படலாம்.

சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருந்தாலும், வருமானம் எதிர்பார்க்கும் அளவு இருக்காது. கூட்டுத்தொழில் சுமாராக நடைபெறும். ஆனாலும் வழக்கமான லாபம் குறையாது. பணியாளர்களின் ஒத்துழைப்பு, வியாபார முன்னேற்றத்துக்குப் பயன் தரும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் இருந்தாலும், பெரிய பாதிப்புகள் ஏற்படாது. கலைஞர்கள் புதிய வாய்ப்பைப் பெற தீவிரமாக முயற்சிப்பர். பங்குச்சந்தை லாபம் தரலாம்.

பரிகாரம்:- இந்த வாரம் செவ்வாய்க்கிழமை விநாயகருக்கு அருகம்புல் மாலை சூட்டி வழிபாடு செய்யுங்கள்.

மேலும் செய்திகள்