லைவ்: ஆசிய விளையாட்டு - தடகள போட்டியில் இந்தியாவுக்கு அடுத்தடுத்து பதக்கங்கள்

Update: 2023-10-02 01:20 GMT
Live Updates - Page 3
2023-10-02 05:27 GMT

கேனோ ஸ்பிரிண்ட்:

கேனோ ஸ்பிரிண்ட் ஆண்கள் கேனோ ஒற்றையர் 1000 மீட்டர் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் நீரஜ் வர்மா 7ம் இடம் பிடித்தார். இப்போட்டியில் சீன தைபே வீரர் தங்கப்பதக்கம் வென்றார்.

கேனோ ஸ்பிரிண்ட் பெண்கள் கேனோ இரட்டையர் 500 மீட்டர் இறுதிப்போடியில் இந்திய அணி கடைசி இடம் (9ம் இடம்) பிடித்தது. இப்போட்டியில் சீன அணி முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றது.

கேனோ ஸ்பிரிண்ட் பெண்கள் கயக் இரட்டையர் 500 மீட்டர் இறுதிப்போட்டியில் இந்திய அணி கடைசி இடம் (9ம் இடம்) பிடித்தது. இப்போட்டியில் சீன அணி முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றது.

கேனோ ஸ்பிரிண்ட் ஆண்கள் கேனோ இரட்டையர் 500 மீட்டர் இறுதிப்போட்டியில் இந்திய அணி 8ம் இடம் பிடித்தது. இப்போட்டியில் கஜகஸ்தான் அணி முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றது.

2023-10-02 04:43 GMT

வில்வித்தை:

வில்வித்தை காம்பவுண்ட் கலப்பு குழு 1/8 எலிமினேஷன் போட்டி 9ல் இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் மோதின. இப்போட்டியில் 159 - 151 என்ற புள்ளிகள் கணக்கில் ஐக்கிய அமீரகத்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி காலிறுதிக்கு முன்னேறியது.

வில்வித்தை

வில்வித்தை காம்பவுண்ட் ஆண்கள் குழு 1/8 எலிமினேஷன் சுற்று 25ம் போட்டியில் இந்தியா - சிங்கப்பூர் மோதின. இப்போட்டியில் 235 - 219 என்ற புள்ளி கணக்கில் சிங்கப்பூரை வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது. இதன் மூலம் காலிறுதி சுற்றுக்கு இந்தியா முன்னேறியது. இந்திய அணியில் பிரவீன், அபிஷேக், ஜவாகர் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

வில்வித்தை:

வில்வித்தை ரிகர்வி பெண்கள் குழு 1/8 எலிமினேஷன் சுற்றில் இந்தியா - தாய்லாந்து மோதின. இப்போட்டியில் தாய்லாந்தை 5-1 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இந்தியா காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

வில்வித்தை:

வில்வித்தை ரிகர்வி ஆண்கள் குழு 1/8 எலிமினேஷன் சுற்றில் இந்தியா - ஹாங்காங் மோதின. இப்போட்டியில் ஹாங்காங்கை 6-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது. இதன் மூலம் காலிறுதி போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றது.

2023-10-02 04:32 GMT

தடகளம்:

தடகளம் ஆண்கள் டிஹெத்லான் போட்டியில் இந்திய வீரர் தேஜஸ்வின் சங்கர் 5ம் இடத்தில் உள்ளார்.

2023-10-02 03:15 GMT

தடகளம்:

தடகளம் பெண்கள் 400 மீட்டர் தடை ஓட்டம் ரவுண்ட் 1 - ஹீட் 1 தகுதிச்சுற்று போட்டியில் இந்திய வீராங்கனை வித்யா முதல் இடம் பிடித்தார். இதன் மூலம் பெண்கள் 400 மீட்டர் தடை ஓட்டம் இறுதிச்சுற்று போட்டிக்கு வித்யா தகுதி பெற்றார்.

2023-10-02 02:46 GMT

தடகளம்:

தடகளம் ஆண்கள் 400 மீட்டர் தடை ஓட்டம் ரவுண்ட் 1 - ஹீட் 1 தகுதி சுற்று போட்டியில் இந்திய வீரர் சந்தோஷ்குமார் தமிழரசன் 2ம் இடம் பிடித்தார். இதே போட்டியில் ரவுண்ட் 1 - ஹீட் 3 தகுதி சுற்று போட்டியில் மற்றொரு இந்திய வீரர் யாஷஷ் பலக்‌ஷா 2ம் இடம் பிடித்தார்.

இதன் மூலம் தடகளம் ஆண்கள் 400 மீட்டர் தடை ஓட்டம் இறுதிப்போட்டிக்கு இந்திய வீரர்கள் தமிழரசன், பலக்‌ஷா நேரடியாக தகுதி பெற்றனர்.

2023-10-02 02:39 GMT

தடகளம்:

தடகளம் ஆண்கள் 800 மீட்டர் ஓட்டம் ரவுண்ட் 1 - ஹீட் 2 தகுதி சுற்று போட்டியில் இந்திய வீரர் முகமது பைசல் 1ம் இடம் பிடித்தார். இதே போட்டியில் ரவுண்ட் 1 - ஹீட் 3 தகுதி சுற்று போட்டியில் மற்றொரு இந்திய வீரர் கிருஷ்ணன் குமார் 2ம் இடம் பிடித்தார். இதன் மூலம் தடகளம் ஆண்கள் 800 மீட்டர் ஓட்டம் இறுதிப்போட்டிக்கு இந்திய வீரர்கள் முகமது பைசல், கிருஷ்ணன் குமார் தகுதி பெற்றனர்.

2023-10-02 02:19 GMT

பதக்க பட்டியலில் 4ம் இடத்தில் இந்தியா...!

ஆசிய விளையாட்டில் 13 தங்கம், 21 வெள்ளி, 21 வெண்கலம் என மொத்தம் 55 பதக்கங்களுடன் இந்தியா பதக்க பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது.

2023-10-02 02:16 GMT

ரேலர் ஸ்கேட்டிங்

ரோலர் ஸ்கேட்டிங் ஆண்கள் ஸ்பிட் ஸ்கேட்டிங் 3000 மீட்டர் ரிலே ரேஸ் போட்டியில் இந்திய அணி வெண்கலப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது. ஆனந்த் குமார், ஆர்யன்பால் சிங், ராகுல், விக்ரம் ஆகியோர் அடங்கிய இந்திய அணி இறுதிப்போட்டியில் 3ம் இடம் பிடித்து வெண்கலப்பதக்கம் வென்றுள்ளது.

2023-10-02 02:02 GMT

ரோலர் ஸ்கேட்டிங்:

ரோலர் ஸ்கேட்டிங் பெண்கள் ஸ்பிட் ஸ்கேட்டிங் 3000 மீட்டர் ரிலே ரேஸ் போட்டியில் இந்திய அணி வெண்கலப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது. சஞ்சனா, கார்திகா, ஹிரல், ஆரதி ஆகியோர் அடங்கிய இந்திய அணி இறுதிப்போட்டியில் 3ம் இடம் பிடித்து வெண்கலப்பதக்கம் வென்றுள்ளது.

2023-10-02 01:56 GMT

வில்வித்தை:

வில்வித்தை ரிகர்வி கலப்பு குழு 1/8 எலிமினேட்டர் சுற்று போட்டி 3ல் இந்தியா - மலேசியா மோதின. பரபரப்பாக நடந்த இப்போட்டியில் மலேசியாவை 6-2 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது. இந்திய அணியில் அங்கிதா, அதனு தாஸ் இடம்பெற்றிருந்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்தியா காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்