வில்வித்தை: வில்வித்தை காம்பவுண்ட் கலப்பு குழு... ... லைவ்: ஆசிய விளையாட்டு - தடகள போட்டியில் இந்தியாவுக்கு அடுத்தடுத்து பதக்கங்கள்

வில்வித்தை:

வில்வித்தை காம்பவுண்ட் கலப்பு குழு 1/8 எலிமினேஷன் போட்டி 9ல் இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் மோதின. இப்போட்டியில் 159 - 151 என்ற புள்ளிகள் கணக்கில் ஐக்கிய அமீரகத்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி காலிறுதிக்கு முன்னேறியது.

வில்வித்தை

வில்வித்தை காம்பவுண்ட் ஆண்கள் குழு 1/8 எலிமினேஷன் சுற்று 25ம் போட்டியில் இந்தியா - சிங்கப்பூர் மோதின. இப்போட்டியில் 235 - 219 என்ற புள்ளி கணக்கில் சிங்கப்பூரை வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது. இதன் மூலம் காலிறுதி சுற்றுக்கு இந்தியா முன்னேறியது. இந்திய அணியில் பிரவீன், அபிஷேக், ஜவாகர் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

வில்வித்தை:

வில்வித்தை ரிகர்வி பெண்கள் குழு 1/8 எலிமினேஷன் சுற்றில் இந்தியா - தாய்லாந்து மோதின. இப்போட்டியில் தாய்லாந்தை 5-1 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இந்தியா காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

வில்வித்தை:

வில்வித்தை ரிகர்வி ஆண்கள் குழு 1/8 எலிமினேஷன் சுற்றில் இந்தியா - ஹாங்காங் மோதின. இப்போட்டியில் ஹாங்காங்கை 6-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது. இதன் மூலம் காலிறுதி போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றது.

Update: 2023-10-02 04:43 GMT

Linked news