லைவ்: ஆசிய விளையாட்டு - தடகள போட்டியில் இந்தியாவுக்கு அடுத்தடுத்து பதக்கங்கள்

மகளிர் 3,000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம் கிடைத்துள்ளது;

Update:2023-10-02 06:50 IST

ஆசிய விளையாட்டில் 13 தங்கம், 24 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 60 பதக்கங்களுடன் இந்தியா பதக்க பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது.


Live Updates
2023-10-02 13:26 GMT

4x400m கலப்பு தொடர் ஓட்டத்தில் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம் கிடைத்துள்ளது. பஹ்ரைன் தங்க பதக்கத்தை வென்றுள்ளது.  இரண்டாம் இடம் பிடித்த இலங்கை தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் வெண்கலம் வென்ற இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம் பெறும் வாய்ப்பு கிடைத்துள்ளது.




2023-10-02 13:10 GMT



2023-10-02 13:07 GMT

4x400m கலப்பு தொடர் ஓட்டத்தில் இந்தியாவுக்கு வெண்கலம் கிடைத்துள்ளது. பஹ்ரைன் தங்க பதக்கத்தையும் இலங்கை வெள்ளி பதக்கத்தையும் வென்றுள்ளது.

2023-10-02 12:51 GMT

ஆசிய விளையாட்டு நீளம் தாண்டுதல் மகளிர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம் கிடைத்துள்ளது.

2023-10-02 11:58 GMT


3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் போட்டியில் இந்தியா 2 பதக்கங்களை வென்றுள்ளது. இந்தியாவின் பரூல் சவுத்ரி வெள்ளியும், ப்ரீத்தி லம்பா வெண்கலப் பதக்கமும் வென்றனர். பரூல் சவுத்ரி 9:27.63 நிமிடங்களில் இலக்கை எட்டி வெள்ளி பதக்கம் வென்றார். இதே போட்டியில் இந்தியாவின் ப்ரீத்தி லம்பா 9:43.32 நிமிடங்களில் இலக்கை எட்டி வெண்கலம் வென்றார். 

2023-10-02 11:38 GMT

ஆசிய விளையாட்டு போட்டித் தொடரின் மகளிர் 3,000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம் கிடைத்துள்ளது

2023-10-02 11:16 GMT

மகளிர் கூடைப்பந்து: காலிறுதி போட்டியில் இந்தியாவும் வடகொரியாவும் மோதின. இதில் இந்திய அணி 57-96 என்ற கணக்கில் வடகொரியாவிடம் தோல்வியை தழுவியது.

2023-10-02 11:14 GMT

மகளிர் கபடி போட்டி: இந்திய அணியும் சீன தைபே அணியும் மோதிய ஆட்டத்தில் இரு அணிகளும் தலா 34 புள்ளிகள் பெற்றன. இதனால் ஆட்டம் டிராவில் முடிந்தது.

2023-10-02 09:30 GMT

ஆசிய விளையாட்டு: ஸ்பீட் ஸ்கேட்டிங்க் போட்டியில் இந்திய அணி வெண்கல பதக்கம் வென்றுள்ளது, 3,000 மீட்டர் ஸ்பீட் ஸ்கேட்டிங் மகளிர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவுக்கு வெண்கலம் கிடைத்துள்ளது.   

2023-10-02 09:22 GMT

ஹாக்கி ஆண்கள் முதல் நிலை குரூப் ஏ லீக் ஆட்டத்தில் இந்தியாவும் வங்காளதேசமும் மோதின. இப்போட்டியில் துவக்கத்தில் இருந்தே இந்திய அணி அபாரமாக விளையாடியது. கோல் மழை பொழிந்த இந்திய அணி , வங்காளதேசத்தை ஒரு கோல் கூட அடிக்க விடவில்லை. இதனால், இந்திய அணி 12-0 என்ற கோல் கணக்கில் வங்காளதேசத்தை பந்தாடி வெற்றியை ருசித்தது.

Tags:    

மேலும் செய்திகள்