லைவ்: ஆசிய விளையாட்டு - தடகள போட்டியில் இந்தியாவுக்கு அடுத்தடுத்து பதக்கங்கள்

Update:2023-10-02 06:50 IST
Live Updates - Page 2
2023-10-02 08:36 GMT

ஸ்குவாஷ்:

ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவு டி போட்டி 87ல் இந்தியா - தாய்லாந்து மோதின. இப்போட்டியில் 2-0 என்ற செட் கணக்கில் இந்தியா வெற்றிபெற்றது.

ஸ்குவாஷ் பெண்கள் ஒற்றையர் ரவுண்ட் ஆப் 16 போட்டி 92ல் இந்தியா - தாய்லாந்து மோதின. இப்போட்டியில் தாய்லாந்து வீராங்கனையை 3-0 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இந்திய வீராங்கனை தனிவ் வெற்றிபெற்றார்.

ஸ்குவாஷ் பெண்கள் ஒற்றையர் ரவுண்ட் ஆப் 16 போட்டி 95ல் இந்தியா - தென்கொரியா மோதின. இப்போட்டியில் 3-1 என்ற செட் கணக்கில் இந்திய வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாவை வீழ்த்தி தென்கொரிய வீராங்கனை வெற்றிபெற்றார்.

2023-10-02 08:25 GMT

செபக்டக்ரா:

செபக்டக்ரா ஆண்கள் குவாட்ரெண்ட் பிரிலிமினெரி சுற்று பி போட்டியில் இந்தியா - பிலிப்பைன்ஸ் மோதின. இப்போட்டியில் 2-0 என்ற புள்ளி கணக்கில் பிலிப்பைன்சை வீழ்த்தி இந்தியா வெற்றிபெற்றது. 

2023-10-02 08:21 GMT

ஹாக்கி:

ஹாக்கி ஆண்கள் பிரிலிமினெரி பிரிவு ஏ போட்டி 28-ல் இந்தியா - வங்காளதேசம் மோதி வருகின்ற. இப்போட்டியில் தற்போதைய நிலவரப்படி 6-0 என்ற கோல் கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.

2023-10-02 08:06 GMT

பேட்மிண்டன்:

பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் ரவுண்ட் ஆப் 64 சுற்று 29ம் போட்டியில் இந்தியா - வியட்நாம் மோதின. பரபரப்பாக நடந்த இப்போட்டியில் 2-0 என்ற புள்ளி கணக்கில் வியட்நாம் வீரரை வீழ்த்தி இந்திய வீரர் ஸ்ரீகாந்த் அபார வெற்றிபெற்றார்.

பேட்மிண்டன் கலப்பு இரட்டையர் ரவுண்ட் ஆப் 32 சுற்று 3ம் போட்டியில் இந்தியா - சீனா மோதின. இப்போட்டியில் 2-0 என்ற செட் கணக்கில் இந்திய அணி வெற்றிபெற்றது. இந்திய அணியில் சாய் பிரதாக் கிருஷ்ண பிரசாந்த், தனிஷா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

பேட்மிண்டன் கலப்பு இரட்டையர் ரவுண்ட் ஆப் 32 சுற்று போட்டி 10ல் இந்தியா - மலேசியா மோதின. இப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி மலேசியா வெற்றிபெற்றது.

பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் ரவுண்ட் ஆப் 64 சுற்று போட்டி 29ல் இந்தியா - வியட்நாம் மோதின. இப்போட்டியில் வியட்நாம் வீரரை 2-0 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இந்திய வீரர் ஸ்ரீகாந்த் நம்மாள்வார் வெற்றிபெற்றார்.

2023-10-02 08:04 GMT

செபக்டக்ரா:

செபக்டக்ரா பெண்கள் குவாட்ரெண்ட் பிரிலிமினெரி சுற்று பி போட்டியில் இந்தியா - பிலிப்பைன்ஸ் மோதின. இப்போட்டியில் 2-0 என்ற புள்ளி கணக்கில் இந்தியாவை வீழ்த்தி பிலிப்பைன்ஸ் அணி வெற்றிபெற்றது.

2023-10-02 07:32 GMT

செபக்டக்ரா:

செபக்டக்ரா ஆண்கள் குவாட்ரெண்ட் பிரிலிமினெரி சுற்று பி போட்டியில் இந்தியா - சிங்கப்பூர் மோதின. இப்போட்டியில் 2-0 என்ற புள்ளி கணக்கில் சிங்கப்பூரை வீழ்த்தி இந்தியா வெற்றிபெற்றது.

2023-10-02 07:03 GMT

வில்வித்தை:

வில்வித்தை காம்பவுண்ட் ஆண்கள் தனிநபர் 1/8 எலிமினேஷன் சுற்று போட்டி 84ல் இந்தியா - வியட்நாம் மோதின. பரபரப்பாக நடந்த இப்போட்டியில் 146-142 என்ற புள்ளி கணக்கில் வியட்நாம் வீரரை வீழ்த்தி இந்திய வீரர் அபிஷேக் வர்மா வெற்றிபெற்றார்.

வில்வித்தை காம்பவுண்ட் ஆண்கள் தனிநபர் 1/8 எலிமினேஷன் சுற்று போட்டி 85-ல் இந்தியா - சீன தைபே அணிகள் மோதின. இப்போட்டியில் 146-145 என்ற புள்ளி கணக்கில் சீன தைபே வீரரை வீழ்த்தி இந்திய வீரர் பிரவீன் வெற்றிபெற்றார்.

வில்வித்தை காம்பவுண்ட் பெண்கள் தனிநபர் 1/8 எலிமினேஷன் சுற்று போட்டி 89ல் இந்தியா - ஈராக் அணிகள் மோதின. இப்போட்டியில் 146-141 என்ற புள்ளி கணக்கில் ஈராக் வீராங்கனையை வீழ்த்தி இந்திய வீராங்கனை ஜோதிகா வெற்றிபெற்றார்.

வில்வித்தை காம்பவுண்ட் பெண்கள் தனிநபர் 1/8 எலிமினேஷன் சுற்று போட்டி 92ல் இந்தியா - இந்தோனேசியா மோதின. இப்போட்டியில் 148-146 என்ற புள்ளி கணக்கில் இந்தோனேசிய வீராங்கனையை வீழ்த்தி இந்திய வீராங்கனை அதிதி வெற்றிபெற்றார்.

1/8 எலிமினேஷன் சுற்றில் வெற்றிபெற்ற இந்திய வீரர், வீராங்கனைகள் அனைவரும் அடுத்த சுற்றான காலிறுதி சுற்றுக்கு முன்னேறினர். 

2023-10-02 06:36 GMT

பதக்க பட்டியலில் 4ம் இடத்தில் இந்தியா...!

ஆசிய விளையாட்டில் 13 தங்கம், 21 வெள்ளி, 22 வெண்கலம் என மொத்தம் 56 பதக்கங்களுடன் இந்தியா பதக்க பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது.

2023-10-02 06:31 GMT

டேபிள் டென்னிஸ்:

டேபிள் டென்னிஸ் பெண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதி சுற்றில் இந்தியா - தென்கொரியா மோதின. பரபரப்பாக நடந்த இப்போட்டியில் 4-3 என்ற செட் கணக்கில் இந்திய இணை சுதிர்தா முகர்ஜி, அய்ஹிகா முகர்ஜிவை வீழ்த்தி தென்கொரிய இணை அபார வெற்றிபெற்றனது.

அரையிறுதி சுற்றில் தோல்வியடைந்த இந்திய இணை சுதிர்தா முகர்ஜி, அய்ஹிகா முகர்ஜி இறுதி சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. அதேவேளை அரையிறுதியில் தோல்வியடைந்தபோதும் இந்திய அணிக்கு வெண்கலப்பதக்கம் கிடைத்துள்ளது.

2023-10-02 06:20 GMT

வில்வித்தை:

வில்வித்தை காம்பவுண்ட் ஆண்கள் தனிநபர் 1/16 எலிமினேஷன் சுற்று போட்டி 56-ல் இந்தியா - சவுதி அரேபியா மோதின. பரபரப்பாக நடந்த இப்போட்டியில் 147-139 என்ற புள்ளி கணக்கில் சவுதி வீரரை வீழ்த்தி இந்திய வீரர் அபிஷேக் வர்மா வெற்றிபெற்றார்.

வில்வித்தை காம்பவுண்ட் ஆண்கள் தனிநபர் 1/16 எலிமினேஷன் சுற்று போட்டி 57-ல் இந்தியா - குவைத் அணிகள் மோதின. இப்போட்டியில் 148-138 என்ற புள்ளி கணக்கில் குவைத் வீரரை வீழ்த்தி இந்திய வீரர் பிரவீன் வெற்றிபெற்றார்.

வில்வித்தை காம்பவுண்ட் பெண்கள் தனிநபர் 1/16 எலிமினேஷன் சுற்று போட்டி 65ல் இந்தியா - இலங்கை அணிகள் மோதின. இப்போட்டியில் 145-132 என்ற புள்ளி கணக்கில் இலங்கை வீராங்கனையை வீழ்த்தி இந்திய வீராங்கனை ஜோதிகா வெற்றிபெற்றார்.

வில்வித்தை காம்பவுண்ட் பெண்கள் தனிநபர் 1/16 எலிமினேஷன் சுற்று போட்டி 72ல் இந்தியா - நேபாளம் மோதின. இப்போட்டியில் 149-137 என்ற புள்ளி கணக்கில் நேபாள வீராங்கனையை வீழ்த்தி இந்திய வீராங்கனை அதிதி வெற்றிபெற்றார்.

வெற்றிபெற்ற இந்திய வீரர், வீராங்கனைகள் அனைவரும் அடுத்த சுற்றான 1/8 எலிமினேஷன் சுற்றுக்கு முன்னேறினர். 

Tags:    

மேலும் செய்திகள்