பீல்டிங் பயிற்சியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வெற்றி

வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-09-17 00:49 GMT

image courtesy: AFP

சென்னை,

இந்தியா - வங்காளதேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 19-ம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி இரு அணி வீரர்களும் சென்னையில் தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் அந்தப் பயிற்சியில் நேற்று இந்திய அணியினர் இரண்டாகப் பிரிந்து 2 அணிகளாக விளையாடியதாக பவுலிங் பயிற்சியாளர் டி திலிப் தெரிவித்துள்ளார். அதில் ஒரு அணிக்கு விராட் கோலி கேப்டனாக செயல்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அந்த பயிற்சி போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வென்றதாகவும் திலிப் கூறியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "அனைத்து வீரர்களையும் ஒன்றிணைக்க வேண்டும் என்பதே இன்றைய பயிற்சியில் யோசனையாகும். எங்களிடம் 2 பிரிவுகள் உள்ளன. முதல் பிரிவு போட்டி சென்னையில் நிலவும் ஈரப்பதத்தை கருத்தில் கொண்டு நடைபெற்றது. அதற்கு தகுந்தாற்போல் நாங்கள் 2 பிரிவாக எங்களுடைய அணியை பிரித்து விளையாடினோம். அந்த அணிகள் கேட்ச் பிடிப்பது போன்ற சிறிய போட்டிகளில் விளையாடியது. அதில் குறைவான தவறுகளை செய்யும் அணிகள் வெற்றி பெறுவதாக வைத்துக் கொண்டோம். அந்த வகையில் விராட் கோலியின் அணி வெற்றி பெற்றது.

அதன் பின் நாங்கள் பவுலர்கள் மற்றும் ஆல் ரவுண்டர்கள் கொண்ட குழுவை இரண்டாகப் பிரித்து விளையாடினோம். அந்தப் பயிற்சியில் உள்வட்டத்திற்கும் வெளிவட்டத்திற்கும் இடையே கேட்ச் பிடிப்பது, களத்தில் அட்டாக் பீல்டிங் செய்வது போன்றவற்றை செய்தோம். அதே போல ஸ்லிப் பகுதியில் கேட்ச் பிடிப்பது, ஷார்ட் லெக் சில்லி பாய்ண்ட் இடங்களில் கேட்ச் பிடிப்பது போன்ற பயிற்சிகளை செய்தோம்.

மொத்தமாக எங்களுடைய பயிற்சி மிகவும் நன்றாக இருந்தது. சென்னையில் நிலவும் வெப்பமான சூழ்நிலைகளின் கீழ் விளையாடுவதற்கு தேவையான பயிற்சிகளை செய்தோம். அதே சமயம் சூழ்நிலை மற்றும் வானிலை ஆகியவற்றைத் தாண்டி இந்த அணி எப்போதுமே நன்றாக செயல்படக்கூடிய பயிற்சிகளை எடுத்து வருகிறது" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்