பும்ரா இந்திய அணியில் இருப்பது மிகப்பெரிய கவுரவம்: பயிற்சியாளர் கம்பீர்

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்;

Update:2024-09-19 07:24 IST

சென்னை,

ஷாண்டோ தலைமையிலான வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இதில் முதலில் டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது.முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.இந்திய நேரப்படி ஆட்டம் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.

வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியையொட்டி இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது ,

நாங்கள் எல்லா அணிகளையும் மதிக்கிறோம். எந்த அணியையும் எளிதாக எடுத்துக் கொள்ளமாட்டோம். நாங்கள் களம் இறங்கி, எங்களுக்கே உரிய கிரிக்கெட்டை விளையாடப்போகிறோம். ஒரு சாம்பியன் அணி போன்று விளையாட விரும்புகிறோம்.

எந்தவிதமான சுழற்பந்து வீச்சையும் சமாளிக்கும் திறன் எங்களது பேட்டிங் குழுவுக்கு உண்டு.கிரிக்கெட் என்று வந்து விட்டால் நாம் எப்போதும் பேட்டர்கள் குறித்தே பேசுகிறோம். ஒரு கட்டத்தில் இந்தியா முழுக்க முழுக்க பேட்டிங் தேசமாக இருந்தது. ஆனால் இப்போது அந்த நிலைமை மாறி விட்டது. அதற்குரிய எல்லா சிறப்பும் ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், அஸ்வின், ஜடேஜா போன்ற பவுலர்களையே சாரும். மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் உலகின் தலைச்சிறந்த பவுலராக பும்ரா வலம் வருகிறார். தனது செயல்பாட்டில் மட்டுமின்றி, சாதிக்கும் வேட்கையும் நன்றாக உள்ளது. முடிந்த அளவுக்கு அதிக டெஸ்டுகளில் விளையாட அவர் விரும்புகிறார். பும்ரா போன்ற பவுலர் அணியில் இருப்பது உண்மையிலேயே கவுரவமாகும். போட்டியில் எந்த ஒரு நிலையிலும் ஆட்டத்தின் போக்கை அவரால் மாற்ற முடியும். இந்த தொடரிலும் அதே போன்ற தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று நம்புகிறேன்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்