டி20 தரவரிசை; ஆல்ரவுண்டர்கள் பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறிய இங்கிலாந்து வீரர்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆண்களுக்கான டி20 தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

Update: 2024-09-18 10:58 GMT

Image Courtesy: @ICC

துபாய்,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை நடைபெறுகிறது.

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் நிறைவடைந்ததை அடுத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஆண்களுக்கான புதிய டி20 தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்த புதிய தரவரிசை பட்டியலில் ஆல் ரவுண்டர்கள் தரவரிசையில் இங்கிலாந்து ஆல் ரவுண்டர் லியாம் லிவிங்ஸ்டன் (253 புள்ளி) 7 இடங்கள் முன்னேறி முதல் இடத்தை பிடித்துள்ளார். இந்த வரிசையில் ஆஸ்திரேலியாவின் மார்க்ஸ் ஸ்டோய்னிஸ் (211 புள்ளி) 2வது இடத்திலும், ஜிம்பாப்வேயின் சிக்கந்தர் ராசா (208 புள்ளி) 3வது இடத்திலும் உள்ளனர்.

பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் (881 புள்ளி) முதல் இடத்திலும், இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் (805 புள்ளி) 2வது இடத்திலும், இங்கிலாந்தின் பில் சால்ட் (800 புள்ளி) 3வது இடத்திலும் உள்ளனர்.

இதேபோல் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இங்கிலாந்தின் அடில் ரஷித் (721 புள்ளி) முதல் இடத்திலும், வெஸ்ட் இண்டீஸின் அஹேல் ஹொசைன் (695 புள்ளி) 2வது இடத்திலும், ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் (668 புள்ளி) 3வது இடத்திலும் உள்ளனர்.

டி20 தரவரிசை பட்டியலில் அணிகளுக்கான வரிசையில் இந்தியா (267 புள்ளி), ஆஸ்திரேலியா (257 புள்ளி), வெஸ்ட் இண்டீஸ் (255 புள்ளி), இங்கிலாந்து (253 புள்ளி), நியூசிலாந்து (247 புள்ளி) முதல் 5 இடங்களில் உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்