'அவர்தான் உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேன்' கோலியை குழந்தைக்கு அறிமுகம் செய்த தந்தை

இந்திய வீரர்கள் தற்போது மெல்போர்ன் மைதானத்தில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-12-23 10:01 GMT

மெல்போர்ன்,

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. 3 டெஸ்ட் முடிவில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் வருகிற 26-ந்தேதி தொடங்குகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் 'பாக்சிங் டே' என்ற பாரம்பரிய சிறப்புடன் தொடங்கும் இந்த போட்டிக்காக இந்திய வீரர்கள் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்திய அணியினர் பயிற்சி மேற்கொள்வதை ஆஸ்திரேலிய மக்கள் கண்டு களித்து வருகின்றனர். அந்த சூழலில் ஆஸ்திரேலியாவில் உள்ள விராட் கோலி ரசிகர் ஒருவர் தனது குழந்தையுடன் இந்திய அணியினர் பயிற்சி மேற்கொள்வதை மைதான கேலரியில் இருந்து கண்டு களித்தார்.

மேலும் தனது குழந்தையிடம், " ஜேமி அங்கே பார். இங்கிருந்து 4-வது வரிசையில் உள்ள பேட்ஸ்மேனை பார். அவர் பெயர் விராட் கோலி. அவர்தான் உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேன்" என்று அறிமுகப்படுத்தினார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்