ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்; விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் தென் ஆப்பிரிக்கா
ஆப்கானிஸ்தான் தரப்பில் பசல்ஹக் பரூக்கி, அல்லா கசன்பர் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தி உள்ளனர்.;
ஷார்ஜா,
தென் ஆப்பிரிக்கா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஷார்ஜாவில் நடைபெறுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது.
இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற தென் ஆப்பிரிக்கா கேப்டன் மார்கரம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதையடுத்து தென் ஆப்பிரிக்காவின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரீசா ஹென்ட்ரிக்ஸ் மற்றும் டோனி டி ஜோர்ஜி ஆகியோர் களம் இறங்கினர்.
முதல் ஓவர் முதலே ஆப்கானிஸ்தான் அணி அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தியது. இதன் காரணமாக தென் ஆப்பிரிக்காவின் ஹென்ட்ரிக்ஸ் 9 ரன், டோனி டி ஜோர்ஜி 11 ரன், அடுத்து களம் இறங்கிய மார்க்ரம் 2 ரன், கைல் வெர்ரையன் 10 ரன், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் ஜேசம் ஸ்மித் ஆகியோர் ரன் எடுக்காமல் அடுத்தடுத்து அவுட் ஆகினர்.
இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 9.2 ஓவர்களில் 36 ரன்னுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதையடுத்து பெக்லுக்வோயா மற்றும் வியான் முல்டர் இணைந்து ஆடி வருகின்றனர். ஆப்கானிஸ்தான் தரப்பில் பசல்ஹக் பரூக்கி, அல்லா கசன்பர் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தி உள்ளனர்.