இந்தியா - வங்காளதேசம் இடையிலான டெஸ்ட் போட்டி; சென்னையில் நாளை தொடக்கம்

இந்தியா - வங்காளதேசம் இடையிலான டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை தொடங்குகிறது.

Update: 2024-09-18 14:38 GMT

Image Courtesy: AFP 

சென்னை,

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றிய ஷாண்டோ தலைமையிலான வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இதில் முதலில் டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது.

முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை தொடங்குகிறது.

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றிய வங்காளதேச அணி அதே உத்வேகத்துடன் இந்தியாவை வீழ்த்தும் முனைப்பில் உள்ளது. அதேவேளையில் நீண்ட இடைவெளிக்கு பின் களம் இறங்கும் இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் உள்ளது. இதனால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

இந்திய அணி சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 17 டெஸ்ட் தொடர்களை கைப்பற்றி அசத்தி உள்ளது. வங்காளதேசத்திற்கு எதிராகவும் இந்த சாதனை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய நேரப்படி ஆட்டம் நாளை காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.

இந்திய அணி விவரம்; ரோகித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, சர்பராஸ் கான், கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரெல் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப், யாஷ் தயாள்.

வங்காளதேச அணி விவரம்; மஹ்முதுல் ஹசன் ஜாய், நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ (கேப்டன்), மொமினுல் ஹக், ஷத்மான் இஸ்லாம், முஷ்பிகுர் ரஹீம் (விக்கெட் கீப்பர்), லிட்டன் தாஸ் (விக்கெட் கீப்பர்), ஜாகர் அலி (விக்கெட் கீப்பர்), ஜாகிர் ஹசன் (விக்கெட் கீப்பர்), ஷகிப் அல் ஹசன், நெஹதி ஹசன் மிராஸ், ஹசன் மஹ்முத், கலீத் அகமது, நஹித் ராணா, நயீம் ஹசன், தைஜூல் இஸ்லாம், தஸ்கின் அகமது.

Tags:    

மேலும் செய்திகள்