இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: தென் ஆப்பிரிக்கா 326 ரன்களுக்கு ஆல் அவுட்

தென் ஆப்பிரிக்க அணி 89.1 ஆவர்களில் 326 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது.

Update: 2022-08-19 11:19 GMT

லண்டன்,

இங்கிலாந்து- தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 45 ஓவர்களில் 165 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ஆலி போப் 73 ரன்கள் எடுத்தார். ஜோ ரூட் (8 ரன்), ஜானி பேர்ஸ்டோ (0) தாக்குப்பிடிக்கவில்லை.

பின்னர் தென்ஆப்பிரிக்கா தனது முதல் இன்னிங்சை ஆடியது. அந்த அணி 89.1 ஆவர்களில் 326 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. மேலும், 161 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. கேப்டன் டீன் எல்கர் 47 ரன்னிலும், சாரெல் எர்வீ 73 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

இதையடுத்து இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்சில் விளையாடி வருகிறது.

 

Tags:    

மேலும் செய்திகள்