மனம் கவரும் பால்கனி அமைப்புகள்

கட்டிடங்களின் தோற்றங்களுக்கு ஏற்ப பால்கனி அமைய வேண்டும்.

Update: 2019-01-25 23:45 GMT
கட்டிடங்களின்  தோற்றங்களுக்கு ஏற்ப (Elevation) பிரதான வாசலுக்கு மேற்புறமாகவும், படுக்கையறை, விருந்தினர் அறை மற்றும் சமையலறை ஆகியவற்றுக்கு அருகிலும் பால்கனிகள் இருக்கலாம். சமையலறையை ஒட்டியபடி பால்கனி இருந்தால் அவ்வப்போது சென்று வெளிப்புற காற்றை சுவாசிக்கலாம்.

பால்கனி அகலத்திற்கேற்ப இரு பக்கங்களிலும் கம்பிகள் பொருத்தி அவற்றில் துணிகளை உலர்த்தலாம். உபயோகமற்ற அட்டைபெட்டிகள், பழைய பர்னிச்சர்கள், தட்டுமுட்டு சாமான்கள் போன்றவற்றை பால்கனியின் ஓரமாக இடைஞ்சல் இல்லாமல் வைக்கவேண்டும். 

புறாக்கள், பச்சை கிளிகள், சிட்டுக்குருவிகள் உள்ளிட்ட பறவைகள், அணில் போன்ற சிறு பிராணிகள் வீட்டின் பால்கனியில் அவ்வப்போது தலைகாட்டலாம். அவற்றை வரவேற்பவர்கள் அரிசி, சோளம், கம்பு போன்ற தானியங்களை தட்டுகளில் வைப்பதோடு, சிறு கிண்ணங்களில் தண்ணீரும் வைக்கலாம். அவை நுழைவதை விரும்பாதவர்கள் கம்பி வலை அமைத்து பாதுகாப்பு செய்துகொள்ளலாம்.

மேலும் செய்திகள்