தியேட்டர் அனுபவத்தை வீட்டிற்கு கொண்டுவரும் ஹோம் தியேட்டர்

வீக் என்ட் என்ற வார இறுதி அல்லது விடுமுறை நாட்களில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களோடு சேர்ந்து திரைப்படங்களுக்கு செல்வது நகர்ப்புற வழக்கங்களில் ஒன்று. இப்போதைய தொலைக்காட்சி பெட்டிகள் அகலமான பிளாட் திரை கொண்டதாகவும், அதிகமான எடை இல்லாமலும், சுவரில் சுலபமாக பொருத்திக்கொள்ளும் விதத்தில் இருப்பதால் ஹோம் தியேட்டர் செட்-அப் பலரது வீடுகளில் இருக்கின்றன.;

Update:2023-09-30 06:22 IST

ஒலியையும் ஒளியையும் தரமான வகையில் நமக்கு அளிப்பதே ஹோம் தியேட்டர் சிஸ்டம். ஒலியில் மோனோ, ஸ்டீரியோ, Dolby 5.1, DTS 5.1, Dolby 7.1, DTS 7.1, Dolby True HD, DTS HD, Dolby ATMOS என்று பல வகைகள் உள்ளன. ஒளியில் PAL, NTSC, டிஜிட்டல், 720P HD, 1080P HD, True HD, 4k HD, Ultra HD என்று பல வகைகள் உள்ளன. DVD அல்லது Pen drive அல்லது Bluray பிளேயரிலிருந்து ஒலி மற்றும் ஒளியைப் பெற்று, ஹோம் தியேட்டர் ஒளியை தொலைக்காட்சி பெட்டி வழியாகவும், ஒலியை ஸ்பீக்கர் வழியாகவும் வழங்குகிறது.

வீடுகளில் சரவுண்டு சிஸ்டம் முறைப்படி ஹோம் தியேட்டர் அமைப்பது பற்றி உள்கட்டமைப்பு நிபுணர்கள் தரக்கூடிய குறிப்புகளை இங்கே காணலாம்.

பூஜையறை அல்லது குழந்தைகள் படிக்கும் அறையை ஒட்டியவாறு ஹோம் தியேட்டர் வருவது கூடாது. முக்கியமாக ஓரிரு ஜன்னல்கள் இருக்கும் அறையே பொருத்தமாக இருக்கும். அங்கே இருக்கும் பர்னிச்சர் ஐட்டங்கள், தரை விரிப்புகள் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். ஜன்னல் திரைகள் மற்றும் கதவுகளுக்கான திரைகள் ஆகியவற்றின் தேர்வுகளை சரியாக அமைத்துக்கொள்வது முக்கியம். மென்மையான திரைகள் மற்றும் புளோர் மேட் ஆகியவை அறையின் ஒலி பிரதிபலிப்புகள் காதுகளுக்கு சரியாக எட்ட உதவுகின்றன.

அமர்வதற்கு ஏற்ப இருக்கைகள் தியேட்டர் எபெக்டில் இருந்தால் பார்க்க அழகாக இருக்கும். முன்புறம் இருப்பவர்கள் திரையை மறைக்காமல், பின்னால் இருப்பவர் பார்ப்பதற்கு வசதியாகவும் அது இருக்கும். பெரிய அளவிலான தொலைக்காட்சி திரை அல்லது புரொஜெக்டர் கொண்டு இயக்கப்படும் திரையாக இருந்தாலும் சரியான தொலைவில் இருப்பது முக்கியம். திரையின் குறுக்களவு எவ்வளவு உள்ளதோ அதற்கு 3 மடங்கு தூரத்தில் அமர்ந்து பார்ப்பதுதான் சரியான முறையாகும்.

ஹோம் தியேட்டர் அறையானது கச்சிதமான ஒளியமைப்பு கொண்டதாக இருக்க வேண்டும். அதிக வெளிச்சம் அல்லது இருட்டு இல்லாமல் மத்திய அளவில் இருக்கவேண்டும். அறையின் லைட் செட்டிங் திரையில் ஒளிப்பிரதிபலிப்பு ஏற்படுத்துவதுபோல இருக்கக்கூடாது.

தட்டைத் திரை டிவி வந்த பிறகு மெல்ல மெல்ல CRT TV-ன் உபயோகம் வழக்கொழிந்துவிட்டது. இப்பொழுது LCD, Plasma. LED வகைகள் உள்ளன. ஒளியின் தரத்தைப் பொறுத்தவரை Plasma TV தான் சிறந்தது. ஆனால், ஆயுள் மற்றும் அதிக உற்பத்தி செலவால் அதன் உற்பத்தி வெகுவாகக் குறைந்து வருகிறது. LCD யின் புது வடிவம்தான் LED TV. நம் வசதியைப் பொறுத்து HD Ready அல்லது Full HD அல்லது 3D அல்லது UHD வசதிகொண்டது வாங்கலாம்.

தொலைக்காட்சி திரை அமைப்புகள் பெரும்பாலும் எல்.ஈ.டி வகையாக இருப்பதால் விளக்குகள் அணைக்கப்பட்ட பின்பு கண்களை கூசும்படியான வெளிச்சம் அதிலிருந்து வரக்கூடாது. அத்துடன் சவுண்டு சிஸ்டம் அமைப்பும் சரியாக இருக்கும்படி கவனித்துக் கொள்ளவேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்