வாய்ப்புகளுக்காக இந்தியா காத்திருக்கவில்லை: இந்திய வம்சாவளியினர் மத்தியில் பிரதமர் மோடி பேச்சு

இந்திய தற்போது வாய்ப்புகளுக்காக காத்திருப்பது இல்லை. வாய்ப்புகளை உருவாக்குகிறது என்று பிரதமர் மோடி பேசினார்.

Update: 2024-09-22 17:32 GMT

நியூயார்க்,

அமெரிக்காவின் டெலவர் மாகாணம் வில்மிங்டன் நகரில் நடைபெறும் குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நேற்று அமெரிக்கா சென்றார். பிலடெல்பியா விமான நிலையத்தில் ஏராளமான இந்தியர்கள் திரண்டு வந்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். குவாட் உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் தலைவர்களுடன் கலந்துரையாடினார்.

இதையடுத்து, நியூயார்க் நகரில் இந்திய வம்சாவளியினர் பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது: இந்திய தற்போது வாய்ப்புகளுக்காக காத்திருப்பது இல்லை. வாய்ப்புகளை உருவாக்குகிறது. சுராஜ் மற்றும் சமுர்த் பாரத்திற்காக எனது வாழ்க்கையை நான் அர்ப்பணிக்க உள்ளேன். இந்தியா யாரையும் பின்பற்றி செல்வது இல்லை. புதிய அமைப்புகளை உருவாக்கி முன்னோக்கி செல்கிறது" இவ்வாறு அவர் பேசி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்